இந்திய ராணுவ ரகசியங்கள் சென்னை வழியாக யுஎஸ்சுக்கு கடத்தலா?
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஒரு பார்சலில் இந்திய கடற்படை குறித்த வரைபடங்கள் மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு ராணுவ ரகசியங்கள் கடத்தப்படும் முயற்சியாக இது இருக்கக் கூடும் என்ற கோணத்தி்ல மத்திய உளவுப் பிரிவு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்த 5 பெட்டிகளில் சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது திடுக்கிட்டனர்.
பெட்டிகள் அனைத்தும் சேலம் ஏற்காட்டைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசிக்கும் அட்ரைன் மார்லே (வயது 78) என்பவருக்கு அனுப்பப்படுவதாகத் தெரிந்தது. இவர் இந்திய ராணுவ பொறியியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பதிவேடுகளைப் பார்க்கும் போது, மார்லே அவற்றை அமெரிக்காவில் உள்ள தனது முகவரிக்கு அவரே 'புக்' செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு பார்சலில் இருந்த ஆவணங்கள் மிக ரகசியமான தகவல்களை உள்ளடக்கியிருந்தன.
இதில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தின் 'புளு பிரின்ட்', ஹைதராபாத் விமான நிலையத்தின் புளு பிரின்ட் போன்ற ஆவணங்கள் இருந்தன.
பொது மக்களுக்கு இவை தேவையற்ற ஆவணங்களாகும். ஆனால் மார்லேயின் பெட்டிக்குள் அவை ஏன் வந்தது என்ற கேள்வி எழுந்தது.
அமெரிக்காவுக்கு அவை அனுப்பப்படுவதால் உடனடியாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
இப்போது மத்திய உளவுத் துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மற்ற 4 பார்சல்களையும் சோதனை போட்ட போது, அவற்றில் மார்லேயின் சொந்த உடமைகள் காணப்பட்டன. அமெரிக்காவில் வைத்து மார்லேவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி












Click it and Unblock the Notifications