செம்மொழி மாநாடு-கோவை ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
சென்னை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்களும் வரவுள்ளனர்
இதையடுத்து மாநாடு நடைபெறும் நாட்களில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில் வழக்கமாக கோவைக்கு இயக்கப்படும் பிற ரயில்களிலும் இந்த மாநாட்டின்போது 300 படுக்கை வசதிகளை ஒதுக்கித் தருமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வர்த்தகப் பிரிவிடம் தமிழக அதிகாரிகள் கடிதம் தந்துள்ளனர். அதில், ஜூன் 22 முதல் 27ம் தேதி வரை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன், நீலகிரி, கோவை, இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 300 படுக்கை வசதி சீட்டுகளை மாநாட்டில் பங்கேற்போருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே பரிசீலித்து வருகிறது.
மேலும் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மாநாட்டின்போது கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications