அமைச்சரவையில் சிறிய மாற்றம்-துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதல் பொறுப்பாக இரண்டு துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல கீதா ஜீவன் வசமிருந்த உடல் ஊனமுற்றோர் நலத் துறை 'மாற்றுத் திறனாளிகள் நலத் துறை'யாக மாற்றப்பட்டு இது முதல்வர் கருணாநிதி வசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிடுள்ள செய்திக் குறிப்பில், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இருந்தது. அதே போல வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் சிறைத் துறை ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த இரு துறைகளும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் வசம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், அவரிடம் சட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, சிறை ஆகிய மூன்று துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உடல் ஊனமுற்றோர் நலத் துறை:
சமூக நலம் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலத் துறை அமைச்சராக கீதா ஜீவன் செயல்பட்டு வந்தார். அதில், உடல் ஊனமுற்றோர் நலத்துறை என்பது "மாற்றுத் திறனாளி நலத் துறை'யாக மாற்றப்பட்டு முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்காடு வீராசாமியின் உடல் நலக் குறைவால் அவர் வசம் இருந்த பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications