பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 3 நாள் ஸ்ட்ரைக்... பெரும் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

British Airways
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஊழியர்கள் மூன்று நாள்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான உழியர்களின் சம்பளம், சலுகைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கடந்த சில தினங்களாக யுனைட் யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் நடந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததாலேயே இந்த ஸ்டிரைக்கை மேற்கொண்டுள்ளதாக விமான ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

வெள்ளிக் கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த ஸ்ட்ரைக் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

இதுவரை 1100 வி்மானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் விடுமுறைக்காக பல நாட்டு மக்கள் பயணத்துக்குக் காத்திருக்கையில் ஏற்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தம் பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பட்டியலிட்டிருந்த விமானங்கள் எண்ணிக்கு 1950. இவற்றில் 1100 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சேவை முடங்கிவிட்டது.

"இது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயணிகள் பாதிக்கக் கூடாது என்பதில் யூனியன் - நிர்வாகம் தெளிவாக இருந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன்.

கடந்த டிசம்பரில் கிறிஸ்துமஸ் சீஸனில் இதே போல 12 நாள்கள் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததும் அதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பல பில்லியன் டாலர்களை இழந்ததும் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+