இனி ஐடிஐ மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்! - முதல்வர் கருணாநிதி

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணச்சலுகை வழங்கும் திட்டம் 1990-ம் ஆண்டில் தி.மு.க. அரசினால் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், அத்திட்டம் படிபடியாக மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்க்கும் விரிவு படுத்தப்பட்டது. பள்ளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்பட்டது போல 2007-ம் ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி களிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்க்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் 9.7.2009 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் முடிவில் அரசு வெளியிட்ட அறிவிப் பிற்கிணங்க, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்பட்டுள்ளது போல, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி,ஐ.) பயிலும் மாணவ- மாணவியர்க்கும் இலவசப் பேருந்துப் பயணச்சலுகையை வழங்கி முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் பயனாக, ஏறத்தாழ 21 ஆயிரத்து 500 மாணவ-மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே, 84 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.
-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications