இந்தியாவின் 'காஸ்ட்லி' ரயில் - மமதா தொடங்கி வைத்தார்!
கொல்கத்தா: இந்தியாவின் மிக 'காஸ்ட்லி'யான சொகுசு ரயில் சேவையை கொல்கத்தாவில் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி துவக்கி வைத்தார்.
மஹாராஜா எக்ஸ்பிரஸ் எனப்படும் இந்த சுற்றுலா ரயிலில் பயணம் செய்ய ஓர் இரவுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து கயா, காசி, பாந்தவ்கார்க், கஜூராஹோ, குவாலியர் மற்றும் ஆக்ரா ஆகிய இடங்கள் வழியாக டெல்லி சென்றடையும் இந்த சுற்றுலா ரயிலை நேற்றிரவு 10.10 மணிக்கு கோல்கத்தா ரயில் நிலையத்தில் அமைச்சர் மமதா துவக்கி வைத்தார்.
ஆறு பகல் மற்றும் ஏழு இரவுகள் கொண்ட சுற்றுலா திட்டத்தின் படி, இந்த சொகுசு ரயிலில் பயணம் செய்வது மிகவும் ரம்மியமான அனுபவமாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வசதிகளுடன் 'படு பந்தா'வாக வடிவமைக்கப்பட்ட 23 பெட்டிகளில் மொத்தம் 88 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் கூடுதல் சொகுசு வசதிகள் கொண்ட சிறப்பு 'சூட்' அறைகளும் உள்ளன.
இந்திய ரயில்வே உணவு தயாரிப்பு கழகமும் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சுற்றுலா ரயில் பயண திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துகின்றன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications