பாகிஸ்தான் விளம்பரத்தில் இந்திய போலீஸ் 'லோகோ'!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு சார்பில் வெளியான பத்திரிகை விளம்பரத்தில் இந்திய போலீசாரின் 'லோகோ' இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறை சார்பாக, கடந்த வெள்ளியன்று பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.
ஆங்கில, உருது மொழி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளியான அந்த விளம்பரத்தில், தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்கள் இடம் பெற்றன.
விளம்பரத்தின் அடிப்பகுதியில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறையின் சின்னத்திற்கு பதிலாக இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநில போலீஸ் துறையின் சின்னம் இடம் பெற்றிருந்தது.
மேலும், அந்த 'லோகோ'வுக்கு அடுத்த வரியில் பஞ்சாப் போலீஸ்' என்ற வார்த்தைகளும் பளிச்சிட்டன.
பணியாளர்களின் கவனக் குறைவால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போலீசுக்கு பதிலாக இந்தியாவின் பஞ்சாப் போலீஸ் லோகோ வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண காவல்துறை டிஜிபி தாரிக் சலீம், தவறுக்கு விளம்பர நிறுவனமே காரணம் என குற்றஞ்சாட்டி உள்ளார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் பாகிஸ்தான் விமானப்படை தளபதி தன்வீர் முகமது அகமது படம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications