2011 தமிழக சட்டசபை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமலாகுமா?
சென்னை: தமிழகத்தில் வரும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா ராஜ்யசபாவில் மார்ச் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை விரைவில் லோக்சபாவில் நிறைவேற்ற காங்கிரஸ் மும்முரமாக முயன்று வருகிறது.
இந்த மசோதா வெற்றிகரமா நிறைவேற்றப்பட்டால், லோக்சபாவில் குறைந்தபட்சமாக பெண் உறுப்பினர்கள் 181 பேர் மற்றும் 28 மாநில சட்டப் பேரவைகளில் மொத்தம் 4,109 இடங்களில் 1,370 இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும்.
மகளிருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வர பல்வேறு நடைமுறைகள் இருப்பதால், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகளிருக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த 2 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில் தெரிவித்திருந்தார்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்த பிறகு, எந்தெந்த தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க குழு அமைக்கப்படும்.
மகளிருக்கான தொகுதிகளை எந்த அடிப்படையில் ஒதுக்குவது என்பது உள்ளிட்ட விஷயங்களை இந்தக் குழு ஆராயும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்படும்.
அதன்பிறகே, மகளிருக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து குழு பரிந்துரை செய்யும்.
இதற்கு குறைந்தது 12 மாத கால அவகாசமாவது தேவைப்படும். எனவே வரும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications