2008ம் ஆண்டு முதல் அண்டை வீட்டுக்காரர்கள், சகோதரனால் கற்பழிக்கப்பட்ட சிறுமி மீட்பு
மும்பை: மும்பையில் கடந்த 2 வருடங்களாக அண்டை வீட்டாராலும், சகோதரனாலும் கற்பழிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுமி குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். 9 மாத வயதாக இருந்தபோதே மும்பையில் உள்ள தனது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார். இவரது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து விட்டு மறு கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இதனால் இந்தச் சிறுமி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில்தான் சித்தியின் மகன் (சிறுமியின் அண்ணன்) தவல் பபட் மற்றும் அண்டை வீடுகளில் வசிக்கும் சில காமுக ஆண்களால் இந்த சிறுமி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கற்பழிப்பு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்.
2008 ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் தவல் பபட் சிறுமியைக் கற்பழித்தான். இதுகுறித்து தகவல் வெளியில் ரகசியமாகப் பரவியுள்ளது. இதையடுத்து 71 வயதுக் கிழவன் ஒருவன், சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளான்.
இதேபோல மேலும் பலரும் சிறுமியை சூறையாடியுள்ளனர். இந்த அக்கிரமங்களை எல்லாம் தவல் பபட் செல்போனில் படமாக்கி வைத்துள்ளானாம். அதைக் காட்டி மிரட்டி சிறுமியை பேச விடாமல் செய்து வந்துள்ளான்.
இந்த நிலையில்தான் ஜோத்சனா வீட்டினருக்கு இந்த அக்கிரமச் செயல் தெரிய வந்து அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். தற்போது அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அவரைக் கெடுத்ததாக 71 வயது கிழவனார் உள்பட நான்கு பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தவல் பபட் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிறுமியை, தவல் முதல் முறையாக கற்பழித்தபோது கத்தியைக் காட்டி மிரட்டிக் கற்பழித்துள்ளான். அதன் பின்னர் தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் எல்லாம் அக்கிரமமாக நடந்து கொண்டுள்ளான் தவல்.
ஒருமுறை தவலும், அவனது நண்பன் ராஜு சர்மா என்பவனும், சிறுமியை குர்லாவில் உள்ள ஒரு லாட்ஜுக்குக் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்துள்ளனர். அப்போதுதான் அதை செல்போனில் படமாக்கியுள்ளான் தவல்.
அதன் பின்னர் மற்ற 7 பேரும் (அனைவரும் அண்டை வீடுகளில் வசிப்பவர்கள்) சிறுமியை சீரழித்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications