பாஜக தலைவரின் எடைக்கு எடை ரத்தம் கொடுத்த தொண்டர்கள்!
அகமதாபாத்: எடைக்கு எடை நாணயம் கொடுப்பது பழங்கதையாகி விட்டது குஜராத்தில். அங்கு பாஜக தலைவர் ஒருவரின் எடைக்கு எடை ரத்தம் கொடுத்து அசத்தியுள்ளனர் பாஜகவினர்.
குஜராத் மாநில பாஜக தலைவராகியுள்ளார் ஃபால்டு. இதையடுத்து வித்தியாசமான முறையில் தலைவரைக் கெளரவிக்க முடிவு செய்தனர் அவரது ஆதரவாளர்கள்.
வழக்கமாக எடைக்கு எடை நாணயங்கள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக கொடுப்பது வழக்கம். அதை மாற்றி தலைவரின் எடைக்கு எடை ரத்தத்தைக் கொடுத்து அதை தானமாக தர முடிவு செய்தனர் குஜராத் பாஜகவினர்.
அதன்படி பெரிய தராசில் ஃபால்டுவை உட்கார வைத்தனர். பின்னர் தராசின் மறு முனையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் அடங்கிய டின்களை வைத்தனர்.
ஃபால்டுவின் எடை 75 கிலோ. இதையடுத்து 75 லிட்டர் ரத்தத்தை வைத்தனர். பின்னர் அதை வதோதராவில் தானமாக அளிக்க கொண்டு சென்றனர்.
பின்னர் வழக்கம் போல நாணயங்களைப் போட்டும் எடைக்கு எடை சம்பிரதாயத்தை முடித்துக் கொண்டனர்.
தலைவர்களும், இதுபோன்ற தடபுடல்களும் வட இந்தியாவில் ஓய்வதாக இல்லை.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்.பி. நரேந்திர சிங் டோமர் என்பவருக்கு நடந்த பாராட்டு விழாவில் துப்பாக்கியால் டுமீல் என சுட்டு அதிர வைத்தனர் பாஜகவினர். இதில் ஒரு பாஜக நிர்வாகி காயமடைந்து விட்டார்.
உ.பியிலோ மாயாவதிக்கு விழும் பண மாலைகள் ஓய்வதாக தெரியவில்லை. இதுவரை 3 பண மாலைகளைப் போட்டு அசத்தியுள்ளனர் பகுஜன் சமாஜ் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications