பென்னாகரம் தேர்தல்-ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நான்கு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிலைக்குழு கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றும், பென்னாகரம் தொகுதியில் நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி, ஒகேனக்கல்லுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 25ம் தேதி தேதி மாலை 4 மணியில் இருந்து 28ம் தேதி காலை 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications