ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - மே 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி நீதிபதி மல்லிகார்ஜுனய்யா வழக்கை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வெள்ளிக்கிழமை ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தொடர்புடைய 42 சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். அதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என கூறியிருந்தது.
மேலும், கடந்த 14 வருடங்களாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்குக்குத் தடை விதிக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது நினைவிருக்கலாம்.
மார்ச் 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் அரசுத் தரப்பில் உள்ள 42 சாட்சிகளையும், குறுக்கி விசாரணை செய்ய உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா. மார்ச் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை இது நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
இருப்பினும் தற்போதைய உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மே 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications