துபாய், அபுதாபி, ஷார்ஜா-வில் நீங்க இருந்தால்.. உடனே பாஸ்போர்ட் செக் பண்ணுங்க.. ஜூலை 9 கடைசி நாள்!

Subscribe to Oneindia Tamil

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பால் அந்நாட்டில் விசா காலம் முடிந்து கூடுதல் நேரம் தங்கியிருந்த மக்களுக்கு அபராத விலக்கு அந்நாட்டு அரசு அளித்திருந்தது. இப்படி அபராத விலக்கை பெற்றவர்களுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு இறுதி வாய்ப்பாக ஜூன் 10 முதல் ஜூலை 9 வரை 30 நாட்கள் சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், UAE விசா வைத்திருப்பவர்கள் தங்களின் குடியேற்ற நிலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

UAE visa Dubai UAE visa grace period July 9 UAE overstay amnesty 2026 UAE visit visa extension Dubai Abu Dhabi visa check UAE final amnesty period Overstayed visa UAE July 2026 UAE visa regularization Flight disruption visa amnesty UAE UAE immigration rules July 2026 Check UAE visa status now UAE 9 UAE 2026 UAE UAE UAE 2026 UAE UAE UAE 2026 UAE

யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?

இந்த 30 நாள் சலுகை முக்கியமாக, விமான போக்குவரத்து பாதிப்பால் திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியாமல், ஓவர்ஸ்டே அபராத விலக்கு பெற்றிருந்த விசிட் விசா பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை சீராகாததால் பலர் பல மாதங்கள் கூடுதலாக அமீரகத்தில் தங்கியிருந்தனர். தற்போது போர் காலம் முடிவுக்கு வந்ததாலும், விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பிய காரணத்தாலும், UAE நாட்டில் விசாவில் இருக்கும் மக்கள் தங்களின் விசா நிலையை சட்டப்படி மாற்றிக்கொள்ள அல்லது ஜூலை 9-க்குள் வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த சலுகை வழங்கப்பட்டது?

இந்த ஆண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் மற்றும் வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் திட்டமிட்டபடி தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியவில்லை.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமீரக அரசு மனிதாபிமான அடிப்படையில் ஓவர்ஸ்டே அபராதங்களை தற்காலிகமாக ரத்து செய்து சலுகை வழங்கியது.

குடியிருப்பு விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்துமா?

குடியேற்ற நிபுணர்களின் விளக்கப்படி, ஜூலை 9 வரை வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை வழக்கமான ரெசிடென்ஸ் விசா கிரேஸ் பீரியடுக்கு பொருந்தாது.

குடியிருப்பு விசா காலாவதியானவர்கள் அல்லது ரத்து செய்யப்பட்டவர்கள், அவர்களுக்கான தனித்தனி விதிமுறைகள் மற்றும் கிரேஸ் பீரியட் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 9-க்குள் என்ன செய்ய வேண்டும்?

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் இருக்கும் மக்கள் இந்த 30 நாட்களுக்குள் விசா வைத்திருப்போர் புதிய விசாவுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். இதேபோல் விசிட் விசாவில் வந்து வேலை கிடைத்திருந்தால் வொர்க் விசா-வை பெறலாம்.

அதைச் செய்ய முடியாதவர்கள் ஜூலை 9-க்குள் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று UAE குடியேற்ற ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜூலை 9-க்கு பிறகு என்ன நடக்கும்?

இந்த 30 நாள் சலுகைக் காலம் முடிந்தவுடன், வழக்கமான ஓவர்ஸ்டே விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வரும். அதன்பிறகு முறையான விசா மற்றும் விசா காலம் இல்லாதவர்கள் மீது அபராதம் மற்றும் பிற குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விசா காலத்தை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூலை 9 நெருங்கி வருவதால், விசா தொடர்பான விசாரணைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அமீரகத்தில் விசிட் விசாவில் தங்கியிருப்பவர்கள் தங்களின் குடியேற்ற ஆவணங்களை உடனடியாக சரிபார்ப்பது மிகவும் அவசியமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+