போலி மருந்து- 5 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: குப்பையில் கிடந்த காலாவதியான மருந்துகளை சேகரித்து விற்பனைக்கு அனுப்பி மோசடி செய்த வழக்கில் 5 பேருக்கு முன் ஜாமீன் கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் இடத்தில் வீசப்பட்ட மருத்துவக் கழிவில் இருந்து காலாவதியான மருந்துகளை சேகரித்து, அவற்றை புதுப்பித்து விற்பனைக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொடுங்கையூரைச் சேர்ந்த சுனிதா ராணி என்பவரின் உதவியோடு ஒரு கும்பல் காலாவதியான மருந்துகளை சேகரித்து கோயம்பேட்டில் உள்ள மருந்து கம்பெனிக்கு அனுப்பி, அங்கு மருந்துகளின் தேதியை மாற்றி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதில் கொடுங்கையூரைச் சேர்ந்த சுனிதா ராணி (வயது 29), மற்றும் மருந்து குடோனில் வேலை பார்த்த கிருபாகரன் (30), ராமகிருஷ்ணன் (35), விஜயகுமார் (34), கோவிந்தன் (29), ஜெகதம்மா (30), தர்மராஜன் (50) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனிதாராணி தவிர மற்ற அனைவரும் மருந்து குடோனில் பணி புரிந்தவர்கள்.
விஷயம் அறிந்ததும், மீனா ஹெல்த்கேர் மருந்து குடோனின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் தலை மறைவாகிவிட்டார்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்கள் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் ஷாஜகான், 'இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டவர்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இவர்களுக்கு நீதிமன்றம் முன் பிணை வழங்கக் கூடாது' என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.
குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்-காவல்துறை:
இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள சைபர் குற்றவியல் துறை சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ஆணையர் ராஜேந்திர பேசுகையில், ஆபாச எஸ்எம்எஸ், இ-மெயில் தொடர்பான குற்றங்களை கண்டுபிடிப்பது கடினம். இக்குற்றங்களை கண்டுபிடிப்பது பற்றி மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் காலாவதியான மருந்து விற்கும் நிறுவனம் ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்.
போலி கிரிடிட் கார்டு, கடன் அட்டைகள் மலேசியாவில் இருந்துதான் இங்கு அதிக அளவில் வருவதை கண்டுபிடித்துள்ளோம்.
கோடை விடுமுறையையொட்டி மெரீனா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications