திமுக வேட்பாளரை ஆதரித்து கருணாநிதி இன்று பென்னாகரத்தில் பிரசாரம்
பென்னாகரம்: திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து முதல்வர் கருணாநிதி இன்று பென்னாகரத்தில் பேசுகிறார்.
பென்னாகரம் பிரசாரத்திற்கு முதலில் ரயிலில் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காரிலேயே பென்னாகரம் செல்ல முதல்வர் முடிவு செய்தார். இதன் மூலம் வழியெங்கும் மக்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், காரிலேயே பயணம் செய்ய முதல்வர் முடிவெடுத்தார்.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு முதல்வர் கருணாநிதி கார் பயணத்தைத் தொடங்கினார். கிருஷ்ணகிரிக்குச் செல்லும் முதல்வர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் ஓய்வெடுக்கிறார்.
மாலையில், பென்னாகரம் புறப்பட்டுச் செல்கிறார். அண்ணா திடலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தங்கபாலு, திருமாவளவன், சுதர்சனம், அப்துல் ரகுமான் எம்.பி, பூஜை ஜெகன் மூர்த்தி, பொன் குமார், பு.தா. இளங்கோவன், திருப்பூர் அல்தாப், வலசை ரவிச்சந்திரன் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிருஷ்ணகிரியில் தங்கும் முதல்வர் நாளை காலை கார் மூலம் மீண்டும் சென்னைக்குப் பயணப்படுகிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications