நான் தோற்றிருந்தால் ஆறடி குழிக்குள் போட்டு மூடியிருப்பார்கள்- ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நான் மட்டும் அதிபர் தேர்தலில் தோற்றிருந்தால் என்னை ஆறடி குழியில் போட்டுப் புதைத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.

இதுதொடர்பாக மாத்தளையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் பேசுகையில்,

2005ஆம் ஆண்டு தேர்தலில், பிளவுபட்டு சின்னா பின்னமடைந்திருக்கும் நாட்டை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோரிக்கையுடனேயே மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தனர். மக்களின் கோரிக்கையை நான் நிறைவேற்றினேன்.

கொழும்புக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நாட்டின் பிற பகுதிகளுக்கும் குறிப்பாக கிராமப் புறங்களுக்கும் விரிவுப்படுத்தினேன்.

வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் நமது நாடும் முக்கிய இடத்தைப் பெறக் கூடிய காலம் மிக அருகிலேயே உள்ளது. நமது சுற்றுலாத் துறை வெகுவாக வளர்ச்சியடையும்.

நடந்த முடிந்த இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் ஆறடி அறைக்குள் அடைக்கப்பட்டோ அல்லது ஆறடி குழிக்குள் புதைக்கப்பட்டோ எனது சரித்திரம் முடிவடைந்திருக்கும் என்றார் ராஜபக்சே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+