ரேசன் அரிசி கடத்திய மூவருக்கு 7 ஆண்டு சிறை
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ரேசன் அரிசி கடத்திய வழக்கில் மதுரையை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி கோவில்பட்டியை அடுத்துள்ள தோணுகால் விலக்கு மெயின்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ஒரு லாரியில் 240 மூட்டை ரேசன் அரிசி கடத்தப்பட்டதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுரை பாண்டி நகரை சேர்ந்த லாரி டிரைவர் சாதிக் அலி, மதுரை கேபுதூரை சேர்ந்த கிளினர் கருப்பசாமி, மதுரை பெருங்குடியை சேர்ந்த ஏஜெண்ட் ராஜா, மற்றும் லாரியில் இருந்த மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அண்ணாத்துரை, மணிமாறன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு லாரி டிரைவர் சாதிக் அலி, கிளினர் கருப்பசாமி, ஏஜெண்ட் ராஜா ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அண்ணாத்துரை, மணிமாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications