பென்னாகரத்தில் நாளை பிரசாரம் ஓய்கிறது!
பென்னாகரம்: பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 24 மணி நேரமே உள்ளதால் அங்கு பிரசாரம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு விறுவிறுப்பான பிரசாரம் நடந்து வருகிறது.
பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து அங்கு தற்போது படு சூடான பிரசாரம் நடந்து வருகிறது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியிலேயே முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார்.
பாமக தரப்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் தொடர்ந்து அங்கேயே சுற்றி வந்து பிரசாரத்தை முடுக்கி விட்டு வருகின்றனர்.
முதல்வர் கருணாநிதி இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பிரசாரம் கடைசிக் கட்டத்தை நெருங்கி விட்டதால் பென்னாகரம் தொகுதி முழுவதும் அரசியல் சூடு அதி வேகமாக பரவிக் கிடக்கிறது.
ஒகனேக்கலில் குவிந்த அரசியல் கட்சியினர்:
பென்னாகரம் இடைத் தேர்தலையொட்டி ஒகனேக்கல் அருவியில் நாளை முதல் மூன்று நாட்களுக்குக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றே அங்கு பெரும் திரளான கட்சியினர் படையெடுத்ததால் ஒகனேக்கலில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தேர்தலையொட்டி பென்னாகரம் தொகுதியில் வெளியூர்வாசிகள் நாளை மாலைக்குள் வெளியேறி விட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒகனேக்கல் அருவிக்கக் கூட வெளியூர்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் போகக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பென்னாகரம் தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இன்றே ஒகனேக்கலில் குவிந்து விட்டனர். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஓகனேக்கலில் வெளியூர் அரசியல் கட்சியினர் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மதுபான கடைகளை மூடல்:
இடைத்தேர்தலையொட்டி நாளை மாலை 5 மணி முதல், 27ம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 30ம் தேதியும் இந்தத் தொகுதியிலும் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications