பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொண்டதால் மாணவன் தீக்குளித்து சாவு
சாத்தான்குளம்: பெற்றோர் சண்டையால் மனமுடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான். காப்பாற்ற முயன்ற தந்தை காயமடைந்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கபத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற மாணிக்கம். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களது மகன் வேல்குமார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.
மாணிக்கத்திற்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீ்ட்டில் மனைவியுடன் தகராறு செய்வாராம். நேற்று நள்ளிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதை வேல்குமார் பார்த்து சத்தம போட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் சண்டையை நிறுத்தவில்லை.
இதனால் மனமுடைந்த அவன் திடீரென ஆவேசத்துடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். இதை பார்த்த அவரது தந்தை மாணிக்கம் மகனை காப்பாற்ற முயற்சித்தார். இதில் இருவரும் கருகினர்.
நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் வேல்குமார் இறந்து விட்டார். அவரது தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தட்டார்மடம் எஸ்ஐ பாமாபத்மினி விசாரித்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications