குளச்சலில் டல்லடிக்கும் சீசன்- மீனவர்கள் பெரும் ஏமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீன்பிடி இறங்கு தளங்கள் உள்ளன. பல இடங்களில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
மீன்பிடி சீசன் இல்லாத போது கேரளா, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குமரி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பல மாதங்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.
குளச்சல் இயற்கை துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் விசைப்படகுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். செந்நவரை என்ற கிளிமீன், ரெட்ரிங் எனப்படும் சிவப்பு இறால், கணவாய் வகைகள், நாக்கண்டம் மீன் உள்ளிட்ட பல்வேறு மீன்கள் விசைப்படகு மூலம் பிடிக்கப்பட்டன.
இம்மீன்களை கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளும், வெளிமாவட்ட வியாபாரிகளும் மொத்த விலைக்கு வாங்கி செல்வர். இதில் சிலவகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு விசைப்படகில் 10 முதல் 15 பேர் வரை கடலில் சென்று 15 முதல் 20 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து வர சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது. தற்போது கேரை மீன் சீசன் ஆகும். அதிக அளவு கேரை மீன்கள் கிடைக்க வேண்டும்.
ஆனால் சீசன் டல் அடித்து விட்டதால் குளச்சல் கடற்கரை அருகே அமைந்துள்ள மீன் விற்பனை கூடம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கில் பண செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications