பெண் ஊழியரை நிர்வாண ஸ்கேன் எடுத்த லண்டன் விமான நிலைய அதிகாரி
லண்டன்: ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க வைக்கப்பட்டுள்ள, பயணிகளை நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே பகுதிக்குள் நுழைந்த பெண் ஊழியர் ஒருவரின் உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அதிகாரி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பயணிகளை நிர்வாணமாகக் காட்டி பரிசோதிக்க உதவும் எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
தீவிரவாதிகள் தங்களது உடைகளுக்குள் எதையாவது ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இந்த எக்ஸ்ரே இயந்திரம் வைக்கப்பட்டது.
ஆனால் இதை அங்குள்ள ஊழியர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சக பெண் ஊழியரின் உடல் பாகங்கள் குறித்து ஆபாசமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ளார்.
அந்த அதிகாரியின் பெயர் ஜான் லேக்கர். ஜோ மார்கெட்சன் என்ற பெண் ஊழியர் அந்த எக்ஸ்ரே இயந்திரப் பகுதிக்குள் தற்செயலாக சென்று விட்டார். சற்று குண்டான உடல்வாகு கொண்டவர் அவர்.
அவரது உடல் நிர்வாணமாக எக்ஸ்ரே இயந்திரத்தில் தெரிந்தது. இதைப் பார்த்த லேக்கர், அவரது உடல் பாகம் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது நிர்வாண கோலத்தையும் புகைப்படமாக எடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பாதுகாப்பு அதிகாரி குறித்து ஜோ மேலிடத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து லேக்கரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
லேக்கர் குறித்து விமான நிலைய போலீஸிலும் புகார் கொடுத்துள்ளாராம் ஜோ.
இதுகுறித்து ஜோ கூறுகையில், நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். என்னால் மீண்டும் வேலைக்குப் போகும் மன நிலைக்கே வர முடியவில்லை என்றார் ஜோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications