நித்யானந்தா வழக்கு - கர்நாடக போலீசார் சேலத்தில் தீவிர விசாரணை
ஆத்தூர்: நித்யானந்தாவின் விவகாரமான வீடியோக்களை போலீசிடம் ஒப்படைந்த சாமியாரின் முன்னாள் சிஷ்யர் லெனின் என்கிற தர்மானந்தாவின் வீட்டில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூர் அருகே பிடுதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் சல்லாபிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பிறகு தலைமறைவான நித்யானந்தா பல்வேறு வீடியோக்களில் தோன்றி தனது விளக்கங்களை அளித்து வருகிறார்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பணியாற்றிய தர்மானந்தா என்கிற லெனின் அளித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா மீது குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
ஆனால், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நித்யானந்தாவின் ஆசிரமம் பெங்களூர் அருகில் உள்ள பிடுதியில் இருப்பதால், தமிழக போலீசார் வழக்கை கர்நாடக காவல்துறையிம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழில் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கன்னட மொழிக்கு மாற்றப்பட்டு வழக்கை நடத்துவதற்கு கர்நாடக போலீசார் இரு தினங்களுக்கு முன்பே தயாரானார்கள்.
இதற்கிடையே தனக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இம்மனுவை நிராகரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நித்யானந்தா மீதான வழக்கை போலீசார் தொய்வின்றி தொடர்நது நடத்தவேண்டும் எனக் கூறி,
வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் வரும் 26ம் தேதிக்குள் (நாளை) போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருக்கும் நித்யானந்தா ஆசிரமத்தில் பெங்களூர் சிஐடி போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வீடியோவை வெளியிட்ட நித்யானந்தரின் தலைமை சீடராக இருந்த லெனின் தர்மானந்தாவின் வீட்டில் கர்நாடகா சிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்தவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
கர்நாடகா உளவுப் பிரிவு டிஜிபி தலைமையில் சிஐடி பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications