பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி- புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் புறக்கணிப்பு
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணியை புறக்கணிக்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் இல்லாதவர்கள், அன்றைய தினம் எங்களுக்கு ஆதரவாக மையங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பர்.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வாகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில், 10 சதவீதத்தை பறித்து முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் முழுவதையும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை இடைநிலை கல்வி என்றும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களை மேல்நிலை கல்வி என்று தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட எங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications