திருவள்ளூர் அருகே மின்சார வயர் அறுந்ததால் ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து!

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் -செஞ்சி பனப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையே மின்சார லைனில் கோளாறு ஏற்பட்டது. அதனை ஊழியர்கள் சரி செய்தபோது, திடீரென மின் கம்பத்திலிருந்த பீங்கான் குப்பி உடைந்தது.
இதனால் மின்சார வயர் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை புறப்பட்ட ஷாலிமர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
சென்னை சென்று கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பத்தூரில் நிறுத்தப்பட்டது. அதேபோல் சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட திருத்தணி அரக்கோணம் மின்சார ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. திருத்தணி அரக்கோணத்திலிருந்து காலையில் புறப்பட்ட மின்சார ரயில்களும் பாதிவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால் வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.
அதன்பிறகு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் புறப்பட்டு சென்றன.
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே அறுந்த மின் வயரை சரி செய்யும் போது ரயில்வே ஊழியர் பாலாஜி என்பவர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். அவர் சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications