கோவையில் வேலை நிறைய இருக்கு... செய்யத்தான் ஆளில்லை!
கோவை: தொழிற்சாலையைத் திறந்துவிட்டோம், ஆர்டர் வரவில்லையே என்று கோவை சிறுதொழில் முதலீட்டாளர்கள் ஏங்கிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.
இப்போது, ஆர்டர் குவிந்து கிடக்கிறது... ஆனால் செய்வதற்கு ஆட்கள் இல்லையே என்று தவிக்கும் நிலை அவர்களுக்கு.
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் 25 ஆயிரம் தொழிற்கூடங்களுக்கு இப்போது நேரடியாக வெளிநாட்டு ஆர்டர்கள் வந்து குவிகின்றனவாம். ஆனால் இந்த ஆர்டர்களை குறித்த காலத்துக்குள் முடித்துத் தர திறமையான தொழிலாளர்கள் கிடைக்காததால் முடங்கியுள்ளனவாம் பல தொழிற்கூடங்கள்.
டர்னர், பிட்டர், மில்லர், மெஷின் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஐடிஐ மையங்களில் இன்றைக்கு பெரும்பாலான மாணவர்கள் சேராமல், பாலிடெக்னிக், எஞ்ஜினீயரிங் படிப்புகளை நாடுவதாலும் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் இந்த சிறுதொழிலதிபர்கள்.
உள்நாட்டு ஆர்டர்களுக்கு கிடைக்கும் கட்டணத்தை விட வெளிநாட்டு ஆர்டர்களுக்கு இரட்டிப்பு கட்டணம் கிடைக்கும் என்பகதால், கிடைத்த ஆர்டர்களை விடவும் முடியாமல் செய்யவும் முடியாமல் தவிக்கிறார்களாம் சிறுமுதலீட்டாளர்கள்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநில அரசு சிறுதொழில் பயிற்சி மையங்களை அதிகம் ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனை அதிகம் வழங்குதல், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் சிறு, குறு தொழிலகங்களில் ஓராண்டு பயிற்சி பெறுவதை கட்டாயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கலாம் என்கிறார்கள் சிறுமுதலீட்டாளர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications