விமானத்தில் வெடிப்பொருள்-கேரளாவைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை
திருவனந்தபுரம்: விமானத்தில் வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டது தொடர்பாக பெங்களூர் விமான நிலையத்தில் மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த கிங்ஃபிஷர் தனியார் விமானத்தில் வெடிப்பொருட்கள் இருந்தது கடந்த ஞாயிற்றுக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில், ஆபத்தான வெடிப்பொருட்கள் விமானத்தில் காணப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கியது.
இந்த வெடிப்பொருட்களை யார் வைத்தது என்பது குறித்து பெங்களூர் விமான நிலையத்திலும், திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர்.
விமானத்தில் பயணித்தவர்களின் விவரம், விமான நிலைய ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் தீவிரமாக சோதித்து பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பெங்களூர் விமான நிலையத்தில் மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் துபாய்க்கு புறப்பட திட்டமிட்டிருந்தவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் தகவல்கள் தந்த அவர்கள், விமானத்தில் வெடிப்பொருள் வைத்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாக போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து கேரள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேரள போலீசார் மூன்று பேரையும் விசாரணைக்காக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications