போலி மருந்து மோசடி- தலைமறைவான நிறுவன அதிபர் கோர்ட்டில் சரண்

காலாவதி மருந்து மோசடி வழக்கில் இதுவரை ஜெகதாம்மாள், சுதாராணி, கிருபாகரன், ராமகிருஷ்ணன், விஜயகுமார், கோவிந்தன், தர்மராஜன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை கைதானார்கள்.
காலாவதி மருந்துகளை சப்ளை செய்த்தாக கூறப்படும் மீனா ஹெல்த் கேர் நிறுவனத்தின் சின்மயா நகர் அலுவலக வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தி ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து தலைமறைவான மீனா ஹெல்த்கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி சாத்தம்மாள் மற்றும் சேகர், பிரதீப் சோர்டியா, பாஸ்கரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில், ரவி, வெங்கடேசன் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்து விட்டனர். இந்த நிலையில்தான் முக்கியப் புள்ளியான பிரதீப் சோர்டியாவை நேற்று விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
சொந்த மாநிலமான ராஜஸ்தான் போய் விட்டு டெல்லி வழியாக சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து போலஸார் சோர்டியாவை அமுக்கினர்.
இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடிவந்த மீனாட்சி சுந்தரம் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மீனாட்சி சுந்தரத்தின் தம்பி மாணிக்கமும் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று பிரதீப் சோர்டியா மற்றும் மீனாட்சி சுந்தரத்தின் சகோதரர் மாணிக்கத்துக்குச் சொந்தமான இடங்களில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
மாணிக்கத்துக்கு சொந்தமாக புரசைவாக்கம் நியூ மாணிக்கம் தெருவில் இருந்த வசந்தா மருந்து நிறுவனம், சபரி பார்மஸி ஆகியவற்றை போலீஸார் சோதனை செய்தனர். இறுதியில், வசந்தா மருந்து நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல, சோர்டியாவுக்குச் சொந்தமான அரும்பாக்கம் அப்துல் ரசாக் கார்டனில் உள்ள ஜிஎச் ஃபார்மா, எஸ்பிஐ காலனியில் உள்ள குருதேவ் பார்மஸி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
இங்கு மட்டும் ரூ. 1 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் சிக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காலாவதி மருந்துகள் மோசடி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில்,
காலாவதியான மருந்துகளை மறுவிற்பனைக்கு அனுப்பிய மோசடி தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மருந்துக் கிடங்குகள், மொத்த விற்பனை வளாகங்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் இதில் தொடர்புள்ள வேறு சில நபர்களை கைது செய்ய 60 பேர் அடங்கிய 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிமாநில தொடர்புகள் இருப்பதால் 2 தனிப்படைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளன என்றார் கமிஷனர் ராஜேந்திரன்.
ஒரு பார்மசிஸ்ட் பெயரில் பல கடைகள்:
இதற்கிடையே ஒரு பார்மசிஸ்ட் பெயரில் பல்வேறு கடைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில், மருந்துக் கடைகளை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் அந்த மருந்துக் கடைகளில் முறையான மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும்.
பல கடைகள் ஒரே மருந்தாளுரின் பெயரில் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறு செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டுகள் யாருக்கும் புரிவதில்லை என்று கூறப்படுகிறது. அந்த மருந்துச் சீட்டு மருத்துவரும், மருந்து கடைக்காரர்களும் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் இப்போது 50 மருத்துவமனைகளில் கம்ப்யூட்டர் மூலம் மருந்துச் சீட்டு வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் அனைத்து மருத்துவர்களும் கம்ப்யூட்டர் மூலம் மருந்துச் சீட்டு கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 42,500 மருந்துக் கடைகள் உள்ளன. இவர்களிடம் காலாவதியான மருந்து குறித்து சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழகத்தில் மருந்து நிறுவனங்கள், மருந்துக் கடைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை வளரவில்லை. இப்போது 50 மருந்துக் கட்டுப்பாடு ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கூடுதலாக 25 ஆய்வாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் சுப்புராஜ்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications