கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவை இந்து புராணங்கள் தடை செய்கின்றன- மாஜி நீதிபதி
பெங்களூர்: கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உள்ளிட்ட முறைகேடான உறவுகளை இந்து புராணங்கள் ஏற்கவில்லை என்று முன்னாள் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரமா ஜாய்ஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகை குஷ்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், சேர்ந்து வாழலாம். இது குற்றமில்லை என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த்து.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்த இந்தக் கருத்துக்களை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. பல்வேறு இந்து அமைப்புகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரமா ஜாய்ஸும், உச்சநீதிமன்றத்தின் கருத்தை மறுத்துள்ளார். கிருஷ்ணரையும், ராதையையும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உதாரணமாக காட்டியிருப்பதை அவர் எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவை இந்திய சமுதாயம் அங்கீகரிக்காது, அதை நல்லது என்று ஒருபோதும் அது கூறியதில்லை. இந்து புராணங்கள் இதை தடை செய்கின்றன.
கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதும், சேர்ந்து வாழ்வதும் தவறு என்று யார் சொன்னது என்று நீதிபதி ஒருவர் கேட்டுள்ளார். அதேபோல இது சரி என்று யார் சொன்ன்னது என்ற கேள்வியும் கூடவே எழும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
மகாபாரதம் போதித்த 9 தர்மங்களில், முறையான உறவுகளின் மூலம், திருமணத்திற்குப் பின்னரே ஒருவர் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உடல் ரீதியான உறவு, திருமணத்தின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் அது கூறுகிறது என்று கூறியுள்ளார் ஜாய்ஸ்.
ரமா ஜாய்ஸ் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications