ஏப்ரல் 7ல் திட்டக் கமிஷன் கூட்டம்- 6ம் தேதி டெல்லி செல்கிறார் கருணாநிதி

தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கவுள்ளார். இதற்காக ஏப்ரல் 6ம் தேதி அவர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
திட்டக் கமிஷன் கூட்டத்தை முடித்துக் கொண்டு 7ம் தேதி இரவே சென்னை திரும்புகிறார்.
முதல்வரின் பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்திக்கலாம் எனத் தெரிகிறது.
சோனியாவுடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென சந்தித்துப் பேசினார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறன் நேற்று திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்திலும், திமுக தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து பல்வேறு ஊகத் தகவல்கள் கிளம்பியுள்ளன.
முதல்வர் உத்தரவின் பேரில் சோனியாவை, தயாநிதி மாறன் சந்தித்தாரா அல்லது அவராகவே சந்தித்தாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications