வங்கிக் கல்விக் கடன் குறித்த தகவல்கள்-போன் மூலம் அறியலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கியில் வழங்கப்படும் கல்விக் கடன் குறித்த விவரங்களை தொலைபேசி மூலம் மக்கள் தெரிந்து கொள்ள மாநில நுகர்வோர் மையம் புதிய தொலைபேசி வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நுகர்வோர் கல்விக்காக வங்கியில் இருந்து கடன் பெறும் முறை மற்றும் அதற்காக விண்ணப்பித்தல் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கவும், கல்விக்கடன் பெறும் போது மனதில் கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மாநில நுகர்வோர் சேவை மையம் முடிவு செய்துள்ளது.

வங்கியில் கல்விக்கான கடன் பெறும் போது நுகர் வோர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கான உரிய விளக்கங்களை நுகர்வோர்கள் மாநில நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண்.044-28592828 மூலம் தொடர் கொண்டு கேட்கலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த அலுவலர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த ஆலோசகர் மற்றும் ஒரு வழக்கறிஞரும் விளக்கங்களை வழங்குவார்கள். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+