பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீண்டும் ஸ்ட்ரைக்!
லண்டன்: தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் நான்கு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமான ஊழியர்கள். இன்று முதல் இந்த போராட்டம் நான்கு நாட்கள் நடக்கிறது.
கடந்த வாரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்துக்கும் ஊழியர்களின் சங்கமான 'யுனைட்'டுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு நிர்வாகம் சாதகமான முடிவைத் தெரிவிக்காத நிலையில் மூன்று நாள்கள் ஸ்ட்ரைக்கை மேற்கொண்டனர் விமான பணியாளர்கள். இத்ல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பெரும் நஷ்டத்துக்குள்ளானது நிர்வாகம்.
இதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு ஸ்ட்ரைக்கை இன்று அறிவித்துள்ளனர் பணியாளர்கள். செவ்வாய்க் கிழமை வரை இந்த ஸ்ட்ரைக் தொடர்கிறது.
இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ் கூறுகையில், "நான்கு நாள் ஸ்ட்ரைக் நடந்தாலும், எங்கள் வாடிக்கையாளர்களில் முக்கால்வாசிப்பேரை அதாவது 180000 பயணிகளுக்கு சேவை செய்ய முடியும் என்று நம்புகிறோம். மீதியுள்ளவர்களுக்கு முடி்தவரை மாற்று விமானங்களை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன.
அதேநேரம் தொழிற்சங்கத்தின் மேற்கொள்ளும் இந்த ஸ்ட்ரைக் முற்றிலும் அநியாயமானது" என்றார்.
"இந்த ஸ்ட்ரைக் மூலம் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 149 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டும் (கடந்த முறை நடந்த ஸ்ட்ரைக்கையும் சேர்த்து)... ஆனால் வேறு வழியில்லை" என்று ஊழியர்கள் யூனியன் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications