போலி ஐபிஎஸ் அதிகாரி சாருலதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
சென்னை: போலி எஸ்.பியாக வலம் வந்து சென்னை காவல்துறையை ஏமாற்றி, பலரிடம் பணம் பறித்து கைதான சாருலதாவுக்கு சென்னை கோர்ட் மீண்டும் ஜாமீன் தர மறுத்து விட்டது.
போலீஸ் விசாரணையின்போது தான் காயமடைந்ததாக சாருலதா கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கோரி சாருலதா மனு தாக்கல் செய்திருந்தார். அதை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் மீண்டும் செஷன்ஸ் கோர்ட்டில் சாருலதா ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஷாஜகான் வாதிடுகையில், சாருலதா மிகப் பெரிய அளவில் மோசடி குற்றத்தை செய்துள்ளார். காவல்துறையின் பெயரை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பண மோசடியி்ல் ஈடுபட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், சாருலதாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications