இந்தியாவிலேயே மிகப் பெரும் பணக்காரக் கட்சியாக உயர்ந்தது காங்.

2007-08ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ. 271 கோடியாக இருந்தது. தற்போது அது பெரும் உயர்வைக் கண்டுள்ளது. அதேசமயம், பாஜக காங்கிரஸை விட ரொம்ப தூரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ. 120 கோடியாகும்.
2008-09ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. அதில்தான் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
காங்கிரஸ் கட்சி தேர்தல்கள், கூட்டங்கள், விளம்பரங்களுக்காக மட்டும் ரூ. 110 கோடியை செலவிட்டுள்ளது. இந்த செலவுத் தொகை, பல்வேறு சிறிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வருமானக் கணக்காக ரூ. 69 கோடியைத் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மதிப்பு ரூ. 79 கோடி. சமாஜ்வாடிக் கட்சி கணக்கு ரூ. 22 கோடியாகும்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது காங்கிரஸ். இது அந்தக் கட்சியின் வருவாய் உயர்வுக்கும், சொத்து மதிப்பு அதிகரிப்புக்கும் பெரும் உதவியாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 2002ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 65 கோடியாக இருந்தது. இது 2004ல் ரூ. 136 கோடியாகவும், 2006ல் ரூ. 229 கோடியாகவும் உயர்ந்தது. 2007ம் ஆண்டு இது ரூ. 271 கோடியாக பெருகி, 2008ம் ஆண்டு ரூ. 340 கோடியாகவும் எகிறியது.
கடந்த 2007-08ம் ஆண்டில் கூப்பன்கள் விற்பனை மற்றும் நன்கொடைகள் மூலம் மட்டும் காங்கிரஸ் கட்சி ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளதாம். பாஜகவுக்கு அதே கால கட்டத்தில் நன்கொடைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணம் மூலம் ரூ. 120 கோடி வருவாய் கிடைத்ததாம்.
இதெல்லாம் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள கணக்குதான். ஆனால் உண்மையில் இதை விட பல மடங்கு மதிப்பிலான சொத்துக்கள் அவர்களிடம் இருக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அகமதாபாத் ஐஐஎம் பழைய மாணவர் சங்கத் தலைவர் அனில் பைர்வால் கூறுகையில், அரசியல் கட்சிகள் தேர்தலின்போது செலவழிக்கும் தொகைக்கும், அவர்கள் கணக்கு காட்டும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம். அதேபோலத்தான் அவர்கள் தங்களது சொத்து விவரங்கள் குறித்து தாக்கல் செய்யும் கணக்குகளும் என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications