ஆம்னி பஸ்சில் துப்பாக்கி கடத்திய வழக்கில் கைதான அட்டாக் பாண்டிக்கு முன் ஜாமீன்
மதுரை: சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு ஆம்னி பஸ்சில் துப்பாக்கிகள் கடத்தப்பட்டு வந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி அட்டாக் பாண்டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் அளித்துள்ளது.
கடந்த பி்ப்ரவரி மாதம் 24ம் தேதி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையில் இரண்டு கள்ளத் துப்பாக்கிகள், நான்கு ரவுண்டு துப்பாக்கித் தோட்டாக்கள், 27 புல்லட்கள் இருந்தன.
இதுகுறித்து நடந்த விசாரணையில், சென்னையிலிருந்து தனியார் ஆம்னி பஸ் மூலம் இவற்றை தங்களுக்கு அனுப்பியதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அட்டாக் பாண்டியையும் போலீஸார் சேர்த்தனர். இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ், முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். மேலும், அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம். மதுரையில் தங்கியிருந்து நான்கு வாரங்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் எனவும் பாண்டிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டு, 3 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் அட்டாக் பாண்டி என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications