ஹெட்லியை விசாரிக்கச் செல்லும் குழுவில் மாஜிஸ்திரேட்டும் இடம் பெறுவார்
டெல்லி: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தனது பங்கை ஒப்புக் கொண்டுள்ள லஷ்கர் இ தொய்பாவின் ஏஜென்ட் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரித்து அவனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக இந்திய அரசு ஒரு மாஜிஸ்திரேட்டை நியமிக்க முடிவு செய்துள்ளது. இவர் அமெரிக்கா சென்று ஹெட்லியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டு வரவுள்ளார்.
ஹெட்லியை விசாரிக்க அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்த வாரத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு முறைப்படி கடிதம் அனுப்பவுள்ளது. அனுமதி கிடைத்ததும் இந்த மாஜிஸ்திரேட் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்.
இவர் ஹெட்லியை சந்தித்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164ன் கீழ் ஹெட்லியின் வாக்குமூலத்தைப் பெற்றுப் பதிவு செய்து கொள்வார். இதுபோன்ற வாக்குமூலம் இந்திய கோர்ட்களில் செல்லுபடியாகும் என்பதால் மாஜிஸ்திரேட்டை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
மேலும், மும்பை தனி கோர்ட்டில் ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்போது இந்த வாக்குமூலம் முக்கிய ஆவணாக விளங்கும்.
இந்தியாவால் அனுப்பப்படும் குழுவில், மாஜிஸ்திரேட் தவிர வக்கீல்கள், மும்பை காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் ஆகியோரும் இடம் பெற்றிருப்பார்கள்.
ஹெட்லியை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று முடிவாகி விட்ட நிலையில், ஹெட்லியிடம் நேரடியாக விசாரிக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இந்த விசாரணையின்போதே மாஜிஸ்திரேட் மூலம் அதை வாக்குமூலமாக பதிவு செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஹெட்லியை விசாரித்து முடித்த பின்னரே குற்றப்பத்திரிக்கையாத் தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications