கள் இறக்க அனுமதி கோரி சிறை நிரப்பும் போராட்டம் - கொமுக அறிவிப்பு
கோவை: கள் இறக்க அனுமதி கோரி மே 27ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் கொமுக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட மாநகர் தலைமை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் நாகராஜ் பேசுகையில், 'விவசாயிகளின் நலனுக்காக கள் இறக்க அனுமதி கேட்டு, கொமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் அரசு இது குறித்து கண்டுகொள்ளவில்லை.
கொங்கு மண்டலத்தில், ஒரு கோடியே 80 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன.
இதை தவிர பனை மரங்களும் ஏராளமாக உள்ளன. இதை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு விட்டு, டாஸ்மாக் மது வருமானத்தில் மட்டும் அரசு குறியாக உள்ளது.
கள் இறக்குவது குறித்து முன்னாள் நீதிபதி சிவசுப்ரமணியம் கமிட்டி அமைத்து தீர்வு காண்பதாக தமிழக அரசு உறுதி அளித்தது. அதனால் தான் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.
இதுவரை கமிட்டியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அரசும் எந்த பதிலும் தரவில்லை. இதனால் நாங்கள் எங்களது அடுத்த கட்ட போராட்டத்தை வலுப்படுத்த உள்ளோம்.
எனவே, மே 27ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெறும்' என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications