Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் படுகொலைகள்- மோடியிடம் 5 மணி நேரம் விசாரணை-இரவில் மீண்டும் விசாரணை

Subscribe to Oneindia Tamil

Modi
காந்திநகர்: குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரி உள்பட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பாக இன்று கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் விசாரிக்கப்பட்டார் முதல்வர் நரேந்திர மோடி.

முற்பகலி்ல விசாரணைக்காக உள்ளே சென்ற மோடி மாலை ஐந்தரை மணியளவில்தான் வெளியில் இருந்தார். ஆனால் விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் இன்னும் சில மணி நேரங்களில் மீண்டும் விசாரணைக்கு செல்லவுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டியில் ஜாப்ரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மோடிக்கு தொடர்பு உண்டு. அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜாப்ரியின் மனைவி ஜாகியா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணையை மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் சேகரித்தது.

இதன் அடிப்படையில் நரேந்திர மோடியை நேரில் விசாரிக்க முடிவு செய்து சம்மன் அனுப்பியது. மார்ச் 21ம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அன்று மோடி ஆஜராகவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், மார்ச் 21ம் தேதி ஆஜராக வேண்டும் என்று எஸ்ஐடி கூறவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மோடியின் வழக்கறிஞர் கூறுகையில், மார்ச் 27ம் தேதி ஆஜராகுமாறு கூறித்தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி இன்று மோடி பழைய தலைமைச் செயலக கட்டட வளாகத்தில் உள்ள எஸ்.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

விசாரணைக் குழுவின் முன்பு மோடி ஆஜரானபோது குழுவின் தலைவரான ஆர்.கே.ராகவன் அங்கு இல்லை. பதிலாக, விசாரணைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஏ.கே.மல்ஹோத்ராதான் விசாரணை நடத்தினார்.

முற்பகலில் தொடங்கிய விசாரணை இன்று மாலை ஐந்தரை மணியளவில்தான் முடிவடைந்தது. பின்னர் வெளியில் வந்த மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எஸ்ஐடி விரிவாக பேசியது. ..

அவர் கூறுகையில், சட்டத்திற்கு முன்பு யாரும் உயர்ந்தவர் இல்லை. இதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் சம்மனை மதித்து இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொண்டுள்ளேன்.

எஸ்ஐடி என்னிடம் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தேன். என் மீதான அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலைக் கொடுத்தேன். ஆனால் இது பாரபட்சமான விசாரணை. குஜராத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூட இந்தக் குழுவில் இல்லை. இந்தக் குழு தனது விசாரணையை ஒரே நாளில் முடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

என்னிடம் எஸ்ஐடி விரிவாக பேசியது. நானும் விரிவாக பேசினேன். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்துள்ளேன். விசாரணை இன்னும் முடியில்லை. இன்னும் சில மணி நேரஙகளில் மீண்டும் விசாரணைக்காக செல்லவுள்ளேன் என்றார் மோடி.

ஆனால், என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டது என்பது குறித்து மோடி தெரிவிக்கவில்லை.

இருப்பினும் மோடியிடம் கீழ்க்கண்ட கேள்விகளை எஸ்ஐடி கேட்டதாக தெரிய வந்துள்ளது...

- கோத்ராவில் பெரும் கலவரம் மூண்ட 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினீர்களா. கலவரக்காரர்களை அடக்காமல் அமைதியாக போய் விடும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டீர்களா?

- கலவரம் நடந்து கொண்டிருந்தபோது, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தீர்களா?

- குல்பர்க் சொசைட்டி தாக்கப்பட்டபோது ஜாப்ரியிடமிருந்து முதல்வர் அலுவலகத்திற்குப் போன் அழைப்புகள் வந்தனவா? என்ற கேள்விகள் மோடியிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

9 மணிக்கு மீண்டும் விசாரணை...

முதல் கட்ட விசாரணையை முடித்துள்ள எஸ்ஐடி, இன்று இரவு 9 மணிக்கு மீண்டும் மோடியிடம் விசாரணையைத் தொடரவுள்ளது. விசாரணை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் இரவு நீண்ட நேரம் அது நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மோடியிடம் விசாரணை நடத்திய மல்ஹோத்ராதான் குல்பர்க சொசைட்டி படுகொலை சம்பவம் குறித்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணையின்போது மல்ஹோத்ராவும், மோடியும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர். விசாரணைக்கு உதவியாக வக்கீல்களையோ, உதவியாளர்களையோ மோடி வைத்துக் கொள்ளவில்லை. மாறாக தனியாகவே அவர் விசாரணையை சந்தித்துள்ளார்.

மோடி வருகையைத் தொடர்ந்து விசாரணை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விசாரணைக்காக வந்த மோடி, வெளியில் குவிந்திருந்த மீடியாக்காரர்களைப் பார்த்து சிரித்து, கும்பிட்டபடி சென்றார்.

2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் இப்போதுதான் முதல் முறையாக நரேந்திர மோடிக்கு விசாரணைக்கு உட்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கலவரம் வெடித்தது. அன்றைய தினம் உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் விட வேண்டும், கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக ஒரு புகார் உள்ளது. அதுகுறித்து இன்றைய விசாரணையின்போது மோடியிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

மோடி மீதான விசாரணை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை. இதில் பாஜகவை சம்பந்தப்படுத்துவது நியாயமற்றது.
மோடிதான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பாஜகவுக்கு இதில் தொடர்பில்லை என்றார் கோவிந்த்.

எஸ்.ஐ.டி. தலைவர் ஆர்.கே.ராகவன் இன்று காந்தி நகரிலேயே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. ராகவன் தலைமையிலான குழுவில் மொத்தம் ஐந்து பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் குல்பர்க் சொசைட்டி சம்பவம் உள்பட மொத்தம் 9 வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணையின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்பது குறி்ப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+