தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டில் பாஜக முன்னணிக்கு வரும் - பொன் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
விருதுநகர்: அகில இந்திய கட்சியான காங்கிரஸை தமிழகத்தில் திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். கட்சித் தலைமையின் இந்த போக்கைப் பற்றி மாநிலத்தில் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
விருதுநகர் தெப்பம் வடக்கு பஜாரில் நடைபெற்ற விழாவில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:
அகில இந்திய கட்சியான காங்கிரஸை தமிழகத்தில் திமுகவிடம் அகில இந்திய தலைமை அடமானம் வைத்து விட்டது. இது பற்றி மாநிலத்தில் யாரும் கவலப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தில் உயிரைக் காக்க வேண்டிய மருந்து காலாவதியான பின்பும் விற்கப்படும் கொடுமை நடந்துள்ளது. இத்தனை நாள் அரசு என்ன செய்து கொண்டு இருந்தது.
சிறுபான்மை குழந்தைகளுக்கு மட்டும் தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றது. பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
காமராஜர் ஏழை, பணக்காரர் என்று பார்க்காமல் கல்வியை வழங்கினார். அதனால்தான் கல்விக்கண் திறந்த தந்தை என்கின்றோம்.
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக முதல் நிலைக் கட்சியாக மாறும். தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்' என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications