சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுடன் ஒரே மேடையில் மோடி - பரபரப்பு
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக் குழுவின் விசாரணையில் பத்து மணி நேரம் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய அடுத்த நாளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுடன் ஒரே மேடையில் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று கிட்டத்தட்ட 10 மணி நேரம் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் மோடி. இந்த நிலையில், இன்று அகமதாபாத்தில் நடந்த குஜராத் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.ஜி.பாலகிருஷ்ணனுடன் ஒரே மேடையில் நரேந்திர மோடி பங்கேற்றதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று கோரி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு, குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டோர் கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications