3 அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிருஷ்ணகிரி காவல்துறை குற்றப்பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய எஸ்.முருகசாமி, போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, சென்னை பொருளாதாரக் குற்றம் 2வது பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார்.
சென்னை கியூ பிராஞ்ச் சிஐடி பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.சுப்பிரமணியம், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்னை திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார்.
சிவகங்கை மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கே.மோகன் துரைசாமி, சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, நெல்லை துணை போலீஸ் கமிஷனராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) நியமிக்கப்படுகிறார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications