மாமல்லபுரம் அருகே கோரம்- டீக்கடையில் வேன் மோதி 4 பேர் பலி
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், டீக்கடையில் வேன் ஒன்று பயங்கரமாக மோதியதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மாமல்லபுரத்தை அடுத்த தேவனேரி அருகே உள்ள இளந்தோப்பு என்ற இடத்தில் இன்று அதிகாலை ராஜகோபால் (60), அவரது மனைவி கோவிந்தம்மாள் (52), மதுரை (50), அகல்யா (2) ஆகியோர் சாலையோரம் இருந்த டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.
ராஜகோபால், கோவிந்தம்மாள், மதுரை ஆகியோர் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். டீ குடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்தபோது, சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் பாய்ந்தது.
இதில் ராஜகோபால், கோவிந்தம்மாள், அகல்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மதுரையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான வேன் நடு ரோட்டில் கவிழ்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications