எஸ்ஐடி விசாரணை நெருக்கடிக்கு மத்தியிலும் ஹாயாக ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்த மோடி
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான எஸ்ஐடியின் விசாரணைக்காக பத்து மணி நேரம் தீவிரமாக விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி படு கூலாக இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்ற குஜராத் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இரவில் அகமதாபாத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைக் கண்டு களித்தார்.
பத்து மணி நேர விசாரணையின் எந்தவித பாதிப்பும் மோடியிடம் தெரியவில்லை. மாறாக படு ஹாயாக அவர் காணப்பட்டார். மோடி வருகையைத் தொடர்ந்து போட்டி நடந்த சர்தார் படேல் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
எஸ்ஐடி விசாரணை மிகவும் கடினமான நேரம்
இதற்கிடையே, எஸ்ஐடி விசாரணைக்காக நீண்ட நேரம் அமர்ந்திருந்ததுதான் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரம். இருப்பினும் எனக்கு இந்த சமயத்தில் துணையாக நிற்கும் குஜராத் மக்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
எஸ்ஐடி விசாரணை குறித்து தனது பிளாக்கில் கருத்து தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி. அதில், சட்ட நடைமுறைகளுக்கு நான் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். அதன் உயர் தன்மைக்கு மதிப்பு அளித்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் எனக்குத் துணை நிற்கும், எனக்காக பிரார்த்திக்கும் குஜராத் மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
கடந்த எட்டு வருடங்களாக மீடியாதான் என்னை இருட்டில் வைத்திருக்கிறது. உண்மையில் பார்த்தால் மீடியாதான் என்னை கடந்த எட்டு வருடங்களாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.
என்னைப் பற்றி கடந்த எட்டு வருடங்களாக வதந்திகளைப் பரப்பி்க் கொண்டிருப்போர், அதை நியாயப்படுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு நல்ல புத்தியைத் தர வேண்டும் என கடவுளை கேட்டுக் கொள்கிறேன். சட்டமே இறுதியில் வெல்லும். அதற்குரிய சூழலை உருவாக்க பாடுபடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோடி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications