லாரி ஸ்ட்ரைக்கைத் தவிர்க்க கடைசி கட்ட பேச்சுவார்த்தை!
சென்னை: லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் தொடர்பான கடைசி கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்டால், ஏப்ரல் 5-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர் லாரி உரிமையாளர்கள்.
இந்த ஸ்டிரைக்கில் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளதால், எப்படியாவது இந்த ஸ்ட்ரைக்கை தடுப்பதில் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். பொன்னம்பலம், செயலாளர் என்.ஆர். கார்த்திக் ஆகியோர் இந்த ஸ்ட்ரைக் மற்றும் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றிக் கூறியது:
ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் தேசிய அனுமதி, இறக்குமதி டயர்களுக்கு வரிகள் ரத்து, டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 5-ம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து லாரி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இப் பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படுவில்லையெனில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் கேஸ் டேங்கர் லாரிகளும் நிறுத்தி வைக்கப்படும்.
தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 4 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தம் துவங்கினால் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படும்," என்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications