சென்னை அருகே ஏரியில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்
சென்னை: சென்னை அருகே புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுக் கிடந்ததை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள், மருந்து விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர். இதையடுத்து காலாவதியான மருந்து மாத்திரைகளை மருந்துக் கடைக்காரர்களும், மருந்து நிறுவனத்தினரும் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்று ஏராளமான கொட்டப்பட்ட மருந்து, மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புழுதிவாக்கம் ஷீலா நகரில் உள்ள ஏரியில்,
இன்று காலை 3 மூட்டைகளில் காலாவதி மருந்துகள் கொட்டப்பட்டு கிடந்தன. ஏரிக்கரையில் உள்ள புதர்களில் இவை கிடந்தன.
இதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றினார்கள்.
இந்த மருந்துகள் அனைத்தும் 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் காலாவதியான மாத்திரைகள், பாட்டில் மருந்துகள் ஆகும். பெரும்பாலானவை குழந்தைகள் பயன்படுத்தும் மருந்துகளாகும். இரவோடு இரவாக சிலர் இதை இங்கு கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
கொட்டியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications