பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்கு - போலீஸ் எச்சரிக்கை
நெல்லை: போலீஸ், வக்கீல், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்குரியவர்களைத் தவிர வேறு யார் ஓட்டி வந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கர்க் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பத்திரிக்கை துறையில் சுமார் ஆயிரம் பேரும், போலீஸ் துறையில் சுமார் 2 ஆயிரம் பேரும், வக்கீல்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களது வாகனங்களில் போலீஸ், பிரஸ், வக்கீல் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இந்த வாகனங்களை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது குடும்பத்தினர், நண்பர்கள், என அனைவரும் ஓட்டி செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பணிக்கு சம்பந்தமே இல்லாதவர்களும் தங்களது வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு வலம் வருகின்றனர்.
போலீசார் வாகன சோதனையின் போது இந்த வாகனங்களை சோதனை செய்ய முடியவில்லை. சிலர் தங்களது வாகனத்தை விற்கும்போது, அதை வாங்கும் நபர் அந்த ஸ்டிக்கரை அகற்றாமல் ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் சம்பந்தப்பட்ட துறையில் யார் வேலை செய்கிறார்கள் என தெரியாமல் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக எஸ்பி ஆஸ்ரா கர்க் அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி பிரஸ், போலீஸ், வக்கீல் ஸ்டிக்கர்களுடன் நகரில் உலா வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அந்த துறையில் வேலை செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications