கல்யாணமான 2 நாளிலேயே விவாகரத்து மனு - சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
டெல்லி: கல்யாணமாகி 2 நாட்களிலேயே விவாகரத்து கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த மனுவைத் தாக்கல் செய்த தம்பதியையும், அவர்களுக்காக ஆஜரான வக்கீல்களையும் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
டெல்லியை சேர்ந்த சுமித், பூனம் ஆகியோருக்கு கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணமான அடுத்த 2 நாளிலேயே அவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகி மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், இந்த மனுவை குடும்ப நலக் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பூனம். அதில், அரசியல் சட்டத்தின் 32வது பிரிவை சுட்டிக் காட்டி, குடும்ப நலக் கோர்ட் அந்தப் பிரிவை மீறி செயல்பட்டதாகக் கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், பூனத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தம்பதியினர், ஆறு மாத திருமண வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும். அதனால், இன்னும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னரே தம்பதியினர் குடும்ப நலக் கோர்ட்டை அணுகலாம்.
குடும்ப நலக் கோர்ட், அடிப்படை உரிமைகளை எவ்விதம் மீறியது என்று பூனத்தின் வக்கீல்கள் சரியாகச் சுட்டிக்காட்டவில்லை. மேலும் தம்பதியினர் மற்றும் அவர்களின் வக்கீல்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. சிறிதும் பொறுப்புணர்வில்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் நீதி நிர்வாகத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கடுமையாக கண்டித்தனர் நீதிபதிகள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications