காலாவதியான மருந்துகளை விட டேஞ்சரான போலி மருந்துகளை விற்ற 2 மருந்துக் கடை உரிமையாளர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏற்கனவே காலாவதியான மருந்துகளால் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தற்போது போலி மருந்துகளை விற்றதாக 2 மருந்துக் கடை உரிமையாளர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

காலாவதியான மருந்துகள் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவற்றை ஒழிக்க போலீஸாரும், அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலி மருந்துகளும் மார்க்கெட்டில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் கொடுத்த புகார் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின் பேரில் போலி மருந்துகளைக் கண்டுபிடிக்க அதிரடி வேட்டை தொடங்கியுள்ளது.

ஐ.ஜி.மஞ்சுநாதா, டி.ஐ.ஜி.கண்ணப்பன், எஸ்.பி. மல்லிகா மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் சென்னை, கும்பகோணம், வேலூர் ஆகிய இடங்களில் மொத்தம் 9 மருந்து கடைகளில் இதுதொடர்பான சோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் ஷெனாய்நகர், புரசைவாக்கம், படாளம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 6 மருந்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள விமல் பார்மா என்ற மருந்து கடையில் நடத்தப்பட்ட சோதனையில் ரினர்வ் என்ற 765 போலி வைட்டமின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அக்கடையின் உரிமையாளரான ஹேமந்த்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோட்டில் உள்ள சுதர்சன் மெடிக்கல் ஏஜென்சி என்ற கம்பெனியின் உரிமையாளர் சீனிவாசன் (44) என்பவரும் கைதானார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலிருந்து போலி மாத்திரைகளை வாங்கி இவர்கள் சப்ளை செய்துள்ளனர்.

கைதான ஹேமந்த்குமாரும், சீனிவாசனும் சென்னை கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தனி குரூப்...!:

இப்போது பிடிபட்டுள்ள இருவரும் தனி குரூப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கும், மருந்து வியாபாரிகளான கண்ணன், அப்ரோசேகான், வெங்கடேசன், பதஞ்சன், சுசில்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மருந்து வியாபாரிகளிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ரனர்.

இவர்கள் போலி மருந்துகளை மட்டும் விற்று வரும் கும்பல் ஆவர். இவர்களுக்கும் காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்கும் கும்பலுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. பல்வேறு மருந்துகளின் பெயர்களில் போலிகளைத் தயாரித்து இவர்கள் கடைகள் மூலம் விற்று கொள்ளை கொள்ளையாக சம்பாதித்து வந்துள்ளனர்.

காலாவதியான மருந்துகளை விட மிகக் கொடிய அபாயத்தைக் கொண்டது இந்த போலி மருந்துகள் என்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலி மருந்து வழக்கில் எத்தனை பேர் கைதாகிறார்கள், அதன் வலையமைப்பு உள்ளிட்டவற்றைப் பொறுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து காவல்துறை யோசிக்கும் எனத் தெரிகிறது. காலாவதியான மருந்துகள் விற்பனை வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+