சென்னை-செஙகோட்டை சிறப்பு ரயிலில் மே 16 வரை இடமில்லை
செங்கோட்டை: சென்னை-செங்கோட்டை கோடை கால சிறப்பு ரயிலில் வரும் மே 16ம் தேதி வரை இடமில்லை. இதனால் இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து செங்கோட்டை வரை, திருச்சி, மதுரை, சிவகாசி வழியாக இரு மார்க்கத்திலும் வரும் ஏப் 3ம் தேதி முதல் கோடை கால வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னையில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.25க்கு சிவகாசி வரும். 10.25க்கு செங்கோட்டையை அடையும்.
மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் செங்கோட்டையில் மதியம் 2.30க்கு புறப்படும். மாலை 4.40க்கு சிவகாசி வரும். இந்த ரயில் மறுநாள் காலை 4.15க்கு சென்னை எழும்புரை வந்தடையும்.
இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், திரி டயர் ஏசி கோச் 2, ஆன் ரிசர்வ் பெட்டிகள் 4, டூ டயர் ஏசி கோச் 2 இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. நேற்றைய
நிலவரப்படி இந்த ரயிலில் வரும் மே 16ம் தேதிவரை முன்பதிவு கட்டண டிக்கெட்டுகள் எதுவும் இல்லை.
ஏப்ரல் மாதத்தில் காத்திருப்போர் பட்டியலில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர். மே மாதம் காத்திருப்போர் பட்டியலில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். மே 16ம் தேதிக்கு பின்னர் இரு மார்க்கத்திலும் படுக்கை வசதியுடன் கூடிய இடங்கள் உள்ளன.
சென்னையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் தினசரி பொதிகை ரயிலிலும் கோடை காலத்தில் இடம் இல்லை. எனவே சிறப்பு ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications