தமிழக அரசுக்கு கடன் எவ்வளவு? - சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிட தா.பா. கோரிக்கை

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
தமிழகத்தில் மின்பற்றா குறை காரணமாக சிறு, குறு, தொழில் மட்டும் இன்றி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விபரங்கள் எவ்வளவு என்பது குறித்து சட்டசபை கூட்டத் தொடரில் விளக்க அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் இலவச அரிசி, மணல், இலவச டிவி போன்றவைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2009 ல் இந்திய அளவில் தமிழகத்தில் தான் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு 35 பேர் வீதம் உயிரிழந்துள்ளனர்.
அதே போன்று ஆள் கடத்தல், கொலை சம்பவங்களும் அதிரித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 85, திருநெல்வேலியில் 72, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூரில் 70 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
விலைவாசி உயர்வை கண்டித்து தேசிய அளவில் ஏப்ரல் 8 ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்க தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தமிழக சட்டசபை திறப்பு விழாவில், தி.மு.க.தலைமையின் ஆலோசனைப்படி தான், மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார். அப்படியானால், போரின் போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு அளித்து வந்த மத்திய அரசின் உதவிகளும் தி.மு.க. ஆலோசனையின் பேரில் செய்யப்பட்டவையா என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications