போலீஸ் விசாரணைக்குச் சென்ற அகதிப் பெண் தற்கொலை- கற்பழிக்கப்பட்டதாக அகதிகள் புகார்
கரூர்: போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவர் போலீஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அகதிகள் முகாமில் உள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூர் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், முரளி (28), குமார் (29), பாண்டி (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குமார், பாண்டி இருவரும் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், குமாரின் மனைவி பத்மாதேவியை (28) பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கடந்த 7-ந் தேதி அன்று அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பத்மாதேவியை அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த பத்மாதேவி அன்று இரவு சுமார் 7 மணி அளவில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த காயம் அடைந்த பத்மாதேவியை மற்ற அகதிகள் மீட்டு கரூர் அரசு மருத்துவ்மனையில் சேர்த்தனர்.
அங்கு 21 நாட்களாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த பத்மா தேவி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பத்மாதேவியை விசாரணைக்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி சில நாட்களுக்கு முன்பு கரூரில் போராட்டம் நடந்தது.
பத்மாதேவியிடம் ஏற்கனவே நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. வாக்குமூலம் பெற்று இருந்தனர். அதில் தன்னை போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பத்மாதேவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழாமல் தடுக்க கரூர் அரசு மருத்துவமனை, ராயனூர் அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications